News March 19, 2024
சேலம்: பிரதமர் வருகை – விமான சேவை ரத்து

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சேலத்தில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வரும் நேரத்தில் சென்னை – சேலம் விமானம் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பார்வையாளர் உட்பட அனைவருக்கும் சேலம் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் விமான நிலையம் வருகிறது.
Similar News
News November 2, 2025
சேலம் வழியாக புதிய சிறப்பு ரயில் சேவை!

ஹூப்ளி மற்றும் இராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இன்று முதல் (நவம்பர் 1) தொடங்கப்பட உள்ளது. இந்தச் சிறப்பு ரயில் (எண் 07355) சேலத்தில்
சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு வரும், 7.55 மணிக்கு புறப்படும். ரயில் எண் 07356 ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு வரும்,5.50 மணிக்கு புறப்படும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். **
News November 2, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் நகரம் அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 2, 2025
சேலம்: வசமாக சிக்கிய வாலிபர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம் ஏற்காடை சேர்ந்த விக்னேஷ் (20), அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.


