News October 30, 2024
ரேஷன் அட்டைதாரர்கள் இனி அலைய வேண்டாம்

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர்களை, நாமே சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு ‘MERA RATION 2.0’ செயலியை (APP) ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்திடுங்கள். பின்னர், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழைந்து, Family Details என்பதை க்ளிக் செய்யுங்கள். அதில், Add New Member-ஐ தேர்வு செய்து புதிய நபரை இணைக்கலாம். இதை தவிர, ரேஷன் புதுப்பிப்பு, ரேஷன் ரசீது தகவல்களையும் பார்க்கலாம்.
Similar News
News August 21, 2025
BIG BREAKING: இந்த பொருள்கள் விலை குறைகிறது

GST வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க FM நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் உள்ளிட்ட வகைகளுக்கு தற்போது 12% வரியும், பிரிட்ஜ், AC, சிறிய வகை கார்கள் உள்ளிட்ட பொருள்கள் 28% வரியிலும் இருந்த நிலையில் அவற்றில் மாற்றம் செய்யப்படவுள்ளன. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.
News August 21, 2025
அஜித் மரணத்தில் புதிய குற்றவாளி.. அதிர்ச்சி தகவல்

அஜித் குமார் மரண வழக்கில், CBI ஒரே மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது குற்றவாளியாக தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் பெயரையும் சேர்த்திருப்பது குற்றப் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே, நிகிதாவின் நகைத் திருட்டு வழக்கு விசாரணையை CBI தொடங்க இருப்பதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
News August 21, 2025
PM மோடி எந்த போன் யூஸ் பண்ணுறார் தெரியுமா?

நம்முடைய போனே ரொம்ப Privacy-யானது என்றால், PM மோடி யூஸ் பண்ணும் போன் குறித்து யோசிங்க. Rudra எனப் பெயரிடப்பட்டுள்ள, RAX(Restricted Area Exchange) என்ற போனை அவர் உபயோகிக்கிறார். இந்த போன், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசையில் செயல்படுகிறது. மேலும், எவராலும் ஹேக் பண்ண முடியாத அளவிற்கு சிப் ஒன்றும் போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரிடம் Rudra 2 என்ற இன்னொரு போனும் உள்ளது.