News October 30, 2024
கவிஞர் தணிகைச் செல்வம் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி
முன்னாள் முதல்வர் கருணாநிதியால், ‘மிகத்திறமை வாய்ந்த சிறந்த கவிஞர்’ என்று போற்றப்பட்ட முற்போக்கு எழுத்தாளரும், தமிழ் தேசிய தத்துவக்கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் தணிகைச்செல்வம் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, சிட்லப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அமைச்சர் தா.மோ அன்பரசன் அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News November 20, 2024
சிட்கோ தொழிற்பேட்டையில் ஊழியர்கள் போராட்டம்
ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத் திட்டம் கோரிக்கை வைத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News November 20, 2024
கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு பயிற்சி
கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு பயிற்சி 20.11.2024 மற்றும் 21.11.2024 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR) வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே, மேற்படி பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் இது ஒத்திகை பயிற்சி என்பதால் இதுகுறித்து எவரும் பதற்றம் அடையவோ மற்றும் அச்சம் கொள்ளவோ வேண்டாம் என்று ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 19, 2024
பினாங்கிற்கு சென்னையில் இருந்து விமான சேவை
பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பினாங்கிற்கு, விமான சேவை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது.