News March 19, 2024
விழுப்புரத்தில் மீண்டும் ரவிக்குமார் போட்டி

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, தற்போது அங்கு எம்பியாக உள்ள ரவிக்குமாரே மீண்டும் களம் காண்கிறார். கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் நின்ற அவர் இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் பாமக இங்கு களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
விழுப்புரம்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 24, 2025
விழுப்புரம்: பணிகளை ஆய்வு செய்த செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதனை இன்று (ஆக.24) செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


