News October 30, 2024
திருப்பூர்: விடியல் பயணத்தில் பெண்ணுக்கு அபராதம்
பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் அரசு மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்துள்ளார். இவருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கும் முன்பே டிக்கெட் பரிசோதகர் பேருந்து ஏறி இவருக்கு ரூ200 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில் போக்குவரத்து கழகத்தினர் அவரிடம் அபராதத்தை திருப்பிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.
Similar News
News November 19, 2024
திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 19, 2024
அவிநாசிக்கு திரண்டு வந்த பக்தர்கள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திரு முருக நாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்களாக விளங்குகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு 5 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர் என சுற்றுலாத்துறை கணக்கெடுப்பு கூறுகிறது. அதன்படி அவிநாசியில் லிங்கேஸ்வரர் கோவிலுக்கு 31,000 பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
News November 19, 2024
திருப்பூர் அரசியலில் இது புதுசா இல்ல இருக்கு!
பெருமாநல்லூர் நால் ரோட்டில் அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கட்சி கூட்டங்களில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி, குருமா வழங்கப்படும். ஆனால் நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.