News March 19, 2024
இன்று முதல் தேமுதிக விருப்ப மனு

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் (மார்ச் 19, 20) சென்னை தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு பெறலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். தொடர்ந்து, மார்ச் 21ல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமும் நேர்காணல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவித்தது

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் ₹3,000 ரொக்கம் அடங்கிய இத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
News January 20, 2026
கூட்டணி ஆட்சி கிடையாது: தம்பிதுரை திட்டவட்டம்

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி கிடையாது என்று கூறியுள்ள அதிமுக MP தம்பிதுரை, 2026-லும் கூட்டணி ஆட்சி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், EPS தலைமையில் அதிமுக தனித்து தான் ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் மட்டும் தான் கூட்டணி; ஆட்சியில் கூட்டணி கிடையாது என்று கூறிய அவர், கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 20, 2026
சோஷியல் மீடியாவை அலற வைக்கும் அசின் போட்டோஸ்!

பல ஆண்டுகளாக மீடியா கண்ணில் படாமல் இருந்த அசின், தற்போது வைரலாகியுள்ளார். தங்களது 10-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கணவர் ராகுல், அசினின் போட்டோஸுடன் வாழ்த்துகளை பதிவிட அது ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘10-ம் ஆண்டு வாழ்த்துக்கள், என் அன்பே. வாழ்க்கையில் உன் Co-star-ஆக இருப்பது அதிர்ஷ்டம்’ எனவும் ராகுல் பதிவிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.


