News October 30, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 85
▶ குறள்: வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்
▶ விளக்க உரை: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
SHARE IT.
Similar News
News August 21, 2025
ஆகஸ்ட் 21: வரலாற்றில் இன்று

*1986 – பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் பிறந்ததினம்.
*1778 – அமெரிக்கப் புரட்சிப் போரின் போது, பிரிட்டிஷ் படைகள் பிரெஞ்சு குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டன.
*1907 – தோழர் ப.ஜீவானந்தம் பிறந்ததினம்.
*1963 – திரைப்பட நடிகை ராதிகா பிறந்ததினம்.
* 1988 – நேபாள-இந்திய எல்லைப்பகுதியில் 6.9 அளவில் நிலநடுக்கம். இதில் 1,450 பேர் உயிரிழந்தனர்.
News August 21, 2025
டெல்லி விரைந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். வரும் ஆக.23-ம் தேதி வரை அவர் அங்கிருக்க உள்ளார். ஆளுநரின் பயணம் திட்டமிட்டது என்றும், டெல்லியில் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கவர்னர் அடுத்தடுத்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
News August 21, 2025
பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள்

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துகுரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும்.
*போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
*சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்