News March 19, 2024
திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் மரணம்

திருவெறும்பூரை அடுத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சந்திரன் . இவரும், இவரது நண்பர் தங்கராஜ் 2பேரும் ஸ்கூட்டரில் ராவுத்தான் மேடு பிரிவு சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தங்கராஜ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.
Similar News
News November 3, 2025
திருச்சி: கார் மோதி பெண் துடிதுடித்து பலி

நவல்பட்டை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கோகிலா(49) நேற்று இரவு, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் கோகிலா தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 3, 2025
திருச்சி: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
திருச்சி அருகே இருவருக்கு கத்தி குத்து!

சமயபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன் (26), ராஜேஷ் (22), புகழேந்தி (37) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அரவிந்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை புகழேந்தி வைத்திருந்த கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


