News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

Similar News

News February 15, 2026

கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

கடலூர்: கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

சேத்தியாத்தோப்பு, கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா (45). விவசாயியான இவர் நேற்று இரவு வயல்வெளிக்கு செல்வதற்காக தனது பைக்கில் வடலூர் சாலையில் சென்றார். அப்போது சேத்தியாத்தோப்பில் இருந்து வடலூர் நோக்கி வந்த கார் அவர் மீது மோதிய விபத்தில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சேத்தியாதோப்பு போலீசார் அவர் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 15, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!