News March 19, 2024

விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 8 வரை குறைத்தீர் கூட்டம் ரத்து

image

நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி வரை விருதுநகர் மாவட்ட தலைநகர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள், குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Similar News

News February 11, 2026

விருதுநகர்: ரூ.78,000 மானியம் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <>APP <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை SHARE செய்து மற்றவர்களையும் பயனடைய வையுங்க.

News February 11, 2026

FLASH: சிவகாசி கொலை; மனைவி உட்பட 5 பேர் கைது

image

சிவகாசி அருகே புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் அடித்து கொலை செய்த சம்பவத்தில் புதுக்கோட்டை சங்கர், ராஜேஷ்வரன், முத்துப்பாண்டி, மணிசங்கர், கொலையான ரமேஷின் மனைவி பிரியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னை பிரிந்து சங்கர் என்பவருடன் வாழ்ந்து வந்த தனது மனைவி பிரியாவை அழைக்க வந்த ரமேஷை சங்கர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

News February 11, 2026

விருதுநகர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை அணுகலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*

error: Content is protected !!