News October 29, 2024
கொட்டாரம் அருகே உடல் நசுங்கி பழ வியாபாரி பலி

குமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் என்ற பகவதி(70). பழ வியாபாரியான இவர் இன்று சந்தையில் பழம் வாங்கிவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். கொட்டாரம் அருகே உள்ள ரவுண்டான சந்திப்பில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
Similar News
News August 9, 2025
குமரி: காவல் அதிகாரிகள் பதவி உயர்வு

குமரி மாவட்டத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்று இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் எஸ்.பி.சி.ஐ.டி பரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் பதவி உயர்வு பெற்று தென் மண்டலத்திற்கு விரைவில் பணி மாற்றம் செய்யப்படுகிறார். இதேபோல குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர் மேற்கு மண்டலத்திற்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
News August 9, 2025
குமரி: எல்லாம் நிறைவேறும் தாணுமாலய சுவாமி கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே அருள்பாலிப்பதால் இங்கு எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி இங்கு நிறைய பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இது தேவேந்திரன் சாபம் நீங்கிய தலம் என்றும் நம்பப்படுகிறது.
News August 9, 2025
குமரியில் 633809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்கள் குடற்புழு நீக்க மாத்திரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஒன்று முதல் 19 வயதுடைய 558766 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 75043 பெண்கள் என மொத்தம் 633809 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். 2893 பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.