News March 19, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது பைக்கில் ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தபால் அலுவலகம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் லாரி பரமேஸ்வரன் பைக் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 8, 2025

ஈரோடு: மின் கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

image

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஏடி காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில், இன்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலுமாக தீயில் எரிந்து சேதம் அடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

News August 8, 2025

ஈரோடு மக்களே: முதல்வருக்கே புகார் அளிக்கலாம்!

image

ஈரோடு மக்களே, உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News August 8, 2025

ஈரோடு: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>https://www.bankofbaroda.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று விண்ணபிக்கலாம்.SHARE பண்ணுங்க!

error: Content is protected !!