News March 19, 2024
இன்று முதல் காங்கிரஸ் விருப்ப மனு

காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்க உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று முதல் நாளை (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.
Similar News
News February 2, 2026
Momos-க்கு ₹85 லட்சம் தங்க நகைகள் கொடுத்த சிறுவன்!

உ.பி.,யில் 7-ம் வகுப்பு மாணவன் Momos மீது கொண்ட காதல் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. Momos கடை நடத்தி வரும் மூவர், சிறுவனிடம் இலவசமாக Momos கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை கொண்டு வர வைத்துள்ளனர். இப்படி சிறுக சிறுக சிறுவனை ஏமாற்றி, ₹85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுருட்டி கொண்டு எஸ்கேப்பாகியுள்ளனர். அதிர்ந்துபோன குடும்பத்தினர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
News February 2, 2026
₹5-க்கு TNEB கார்டு.. பெறுவது எப்படி?

EB ரீடிங் எடுக்க ஆள் வரும் போதுதான், கார்ட் எங்கு வைத்தோம் என பல வீடுகளிலும் தேடுவோம். பல நேரங்களில் அந்த கார்ட் தொலைந்து போயிருக்கலாம். அப்படி தொலைந்துவிட்டால், பதற வேண்டாம். உங்க ஏரியாவின் EB ஆபிஸுக்கு சென்று, ₹5 கொடுத்து புதிய EB கார்டை பெற்றுக் கொள்ளுங்க. அதேபோல, அட்டை முழுமையாக யூஸ் செய்துவிட்டால், இலவசமாகவே புதிய EB கார்ட் பெறலாம். பலருக்கும் தெரியாத இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 2, 2026
டிவியை உடைத்த கமல் திமுகவில் சேர்ந்தது சரியா?

திமுக கொடுத்த இலவச டிவியை உடைத்த கமல், பின்னர் அக்கட்சியுடன் இணைந்தது குறித்த விமர்சனத்துக்கு சிநேகன் விளக்கமளித்துள்ளார். ரிமோட்டையும், டிவியையும் புதிதாக வாங்கிக்கொள்ள எங்களுக்கு தெம்பு இருக்கிறது என்றும், ஆனால் இந்த மாநிலம் உடைந்து போகக்கூடாது என்பதற்காக நியாயத்தின் பக்கம் நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியைவிட மாநிலமே இப்போது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.


