News October 29, 2024
மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பனமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News August 27, 2025
சேலம் மாநகரில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள சர்க்கிள் போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சேலம் மாநகரில் ஏழு இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், இதற்கான பட்டியலை உளவு பிரிவு மூலம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு புகார்களுக்கு ஆளானவர்கள் மாற்ற திட்டம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
News August 27, 2025
சேலம்:கலைத்துறையில் சாதிக்க ஆசையா?

சேலம் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஆடியோ வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரை உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியி முடிவில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும் என சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி தெரிவிக்த்துள்ளார். (இதனை ஷேர் பண்ணுங்க)
News August 27, 2025
சேலம் வழியாக பெங்களூரு- கண்ணூர் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஆக.30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கு சிறப்பு ரயில் (06125) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.