News October 29, 2024
பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் ‘வேட்டுவம்’

பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. பிர்சா முண்டா (ஹிந்தி), சர்பட்டா பரம்பரை 2 (தமிழ்) இயக்கவுள்ளார் என பலரும் கூறிவந்தனர். ஆனால், இந்த 2 படங்களையுமே அவர் இயக்கவில்லை. அடுத்ததாக ‘வேட்டுவம்’ என்ற படத்தினை அவர் இயக்கவுள்ளார். இதில் ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Similar News
News August 23, 2025
BREAKING: மூத்த தலைவர் அப்போலோவில் அனுமதி

பாமக கௌரவ தலைவரும், MLAவுமான ஜி.கே.மணி உடல்நலக்குறைவால் சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்த மெடிக்கல் ரிப்போர்ட், இன்று மதியத்திற்கு மேல் அப்போலோ தரப்பில் வெளியிடப்படும் என தெரிகிறது.
News August 23, 2025
செப்.1-ல் முடிவு.. RB உதயகுமார் அறிவிப்பு

யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் பலகட்ட ஆலோசனைகள் இருக்கும். ஆனால், கூட்டணி அமைத்தபிறகு பல குழப்பங்களுக்குள் சிக்கியுள்ளது அதிமுக. காரணம், நேற்று வரை EPS பெயரைக் குறிப்பிடாமல் ‘கூட்டணி ஆட்சி’ தான் என்கிறார் அமித்ஷா. மறுபக்கம் CM நாற்காலியில் EPS-ஐ அமரவைக்க வேண்டும் என சொல்கிறார் அண்ணாமலை. இந்நிலையில், இதுகுறித்து கேட்டதற்கு, ‘செப்.1-ல் EPS பதிலளிப்பார்’ என முடித்துவிட்டார் RB உதயகுமார்.
News August 23, 2025
இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹130-க்கும் கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹1000, நேற்று ₹2000, இன்று ₹2000 என மூன்றே நாளில் ₹5000 அதிகரித்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.