News October 29, 2024

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் நியமனம்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராகவும் முன்னாள் எம்பி வசந்தி முருகேசனை நியமித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

நெல்லை: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 21ம் தேதியன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். வேலைதேடுநரும் கல்வி சான்றுடன் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு நெல்லை Employment Office டெலிகிராம் சானலைப் பயன்படுத்தலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

நெல்லை போலீசில் பணியாற்ற வாய்ப்பு

image

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் காத்தி மணி உத்தரவுபடி மாநகர ஊர்க்காவல் படையில் புதிய நபர்கள் சேர்க்கைக்கான தேர்வு வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெறும். 60 ஆண்கள் 5 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

நெல்லையில் அரிவாள் வெட்டு; 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

image

மறுகால்குறிச்சி கே ஜே நகரை சேர்ந்த இளைஞன் நாங்குநேரி பகுதி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 14ம் தேதி காதல் விவகாரத்தில் சிலர் அறிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய மறுகால்குறிச்சியை சேர்ந்த சரவணன், ராஜா மற்றும் இரண்டு இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!