News March 19, 2024
தினம் ஒரு தொகுதி: இன்று கன்னியாகுமரி

தமிழகத்தின் தென்கோடி தொகுதியான குமரி, எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதுவரை இங்கு நடந்த 4 தேர்தல்களில் திமுக 1, காங். (கூட்டணி) 2, பாஜக 1 என வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News October 31, 2025
17 லட்சம் உயிர்களை காவு வாங்கிய காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு பலி குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகியுள்ளதாக, The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ம் ஆண்டிலிருந்து 38% அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News October 31, 2025
கண்களை கவரும் ஃபிளமிங்கோ

தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு பறவைகளில் மிக அழாகன பறவை ஃபிளமிங்கோ. இவை குளிர்காலத்தின் தொடக்கத்தில் தூத்துக்குடி, தனுஷ்கோடி, கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்தாண்டும் நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் குவிந்துள்ளன. இளஞ்சிவப்பு நிற இறகுகள் கொண்ட கண்களை கவரும் ஃபிளமிங்கோவின் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம்.
News October 31, 2025
எப்படி இருக்கிறது பாகுபலி: The Epic? REVIEW

‘பாகுபலி The Epic’ சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம். பார்த்து பழகியது என்றாலும், Goosebumps-க்கு குறைவே இல்லை. முதல் 2 பாகங்களின் 90 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டாலும், அது பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாஸ் மகிழ்மதிக்கு மீண்டும் திரும்பும் காட்சி கூடுதல் மாஸாக உள்ளது. தமன்னாவின் சீன்களை கட் செய்தது மட்டும் வேதனை அளிக்கிறது. கடைசியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.


