News October 29, 2024

ஆவினில் 3 கோடி ரூபாய்க்கு தீபாவளி விற்பனை இலக்கு

image

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு உட்பட்ட 226 பால் விற்பனை நிலையங்களில் சிறப்பு மைசூர் பாகு, நெய் அல்வா, பால்கேக், பால்கோவா, நெய் மிக்சர் என 22 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகள், 10 டன் நெய் என மொத்தம் ரூ. 3 கோடிக்கு தீபாவளிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆவின் இனிப்பு பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

கிருஷ்ணகிரி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு Forklift Operator (ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர்) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது பயிற்சி இனி பெற www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தங்குமிடம் & உணவு இலவசமாக வழங்கப்படும்.

News August 22, 2025

கிருஷ்ணகிரி: 10th பாஸ் போதும் காவல்துறையில் வேலை

image

கிருஷ்ணகிரி இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> இன்று முதல் வரும் செ.21 வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!