News March 19, 2024

ஷ்ரேயாவுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்!

image

பெண் குழந்தையை பெற்றெடுத்தபின் நடிகை ஷ்ரேயா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய நேர்காணலில் ரஜினி குறித்து பேசிய அவர், ‘சிவாஜி படத்தில் நடிக்கும்போது நீங்கள் தற்போது ஹிட் படங்களில் நடித்துள்ளீர்கள். நாளை இந்த நிலைமை மாறலாம். எப்பேதும் ரசிகர்களோடு மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என ரஜினி அட்வைஸ் செய்ததாக கூறியுள்ளார்.

Similar News

News September 10, 2025

மதராஸிக்கு ரிவ்யூ செய்த சீமான்

image

‘மதராஸி’ படத்தின் சண்டை காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக உள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். ‘மதராஸி’ படம் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு பரிமாணம் எனவும் இது அவருடைய திரைப்பயணத்தில் சிறந்த பதிப்பு என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், ஆக்‌ஷன் படத்திற்குள் ஒரு நல்ல காதலையும் இணைத்து சொன்ன விதம் புதிதாக இருந்தது என்று அவர் கூறினார்.

News September 10, 2025

திமுக அரசு ஒரு பித்தலாட்ட அரசு: EPS

image

திமுக அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என EPS கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட தொழில் முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என அவர் X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயத்தில் திமுக அரசு பொய்யான புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் EPS சாடியுள்ளார்.

News September 10, 2025

துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது!

image

துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். நாட்டின் 2-வது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது என்பது தெரியுமா? உண்மைதான். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரே பதவி இது மட்டும் தான். ஆனால், ராஜ்யசபா தலைவராக பணியாற்றுவதற்காக, அவருக்கு மாதம் ₹4 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதுபோக இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

error: Content is protected !!