News March 19, 2024
ஆர்டரை ரத்து செய்ததற்காக ₹10,000 அபராதம்!

ஃப்ளிப்கார்ட் தளத்தில் நுகர்வோர் ஒருவர் ₹39,000 கொடுத்து ஐபோனை ஆஃபரில் புக் செய்துள்ளார். ஆனால் கூடுதல் லாபத்திற்காக அந்த ஆர்டரை வேண்டுமென்றே ஃப்ளிப்கார்ட் ரத்து செய்து, பணத்தை திருப்பி கொடுத்துள்ளது. ஆனால், ஆர்டரை ரத்து செய்ததற்காக அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். அதில், நுகர்வோர் அடைந்த மன உளைச்சலுக்காக ₹10,000 இழப்பீடு வழங்க ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News April 26, 2025
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News April 26, 2025
மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் காலமானார்

நாட்டின் மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரளாவை சேர்ந்த இவர், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்(ICHR) அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். கேரள வரலாறு, தமிழக வரலாறு, பண்டைய இந்திய வரலாறு, வரலாறு வரைவியல் முறையியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
News April 26, 2025
CSK போட்டியை பார்க்க ரெடியா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ம் தேதி CSK, PBKS அணிகள் மோதவுள்ளன. அதற்கான டிக்கெட் விற்பனை, நாளை (27.04.2025) காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு அடியும் பிடியுமாக நடந்த டிக்கெட் விற்பனை, CSK-வின் தொடர் தோல்வியால் மந்தமடைந்துள்ளது. இதனால், நாளைய டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.