News March 19, 2024
சேலத்தில் பாமக போட்டி?

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News April 6, 2025
மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

“மாணாக்கர்கள் சமூக வலைதளங்களை தங்களது ஆக்கப்பூர்மான முன்னேற்றத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது மாணாக்கர்கள் தங்களுக்கான விருப்பமுள்ள படிப்புகள் குறித்து தெரிந்து வைத்துக்கொண்டு அதற்குரிய கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்” என மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவுறுத்தல்!
News April 6, 2025
சேலம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 6, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

“பசூர்- ஊஞ்சலூர் ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, வரும் ஏப்ரல் 08, 11 தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; மறுமார்க்கத்தில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; மேற்கண்ட ரயில் கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது” என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.