News October 28, 2024

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

image

வல்லம் புரோட்டா கடையில் பிரச்சனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வல்லத்தை சேர்ந்த சுபாஷ்கண்ணா (26), புளியரையில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை லிங்கராஜ் (33) மற்றும் புளியங்குடி கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான ரத்தினபுரி ஷாஜி (45) ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 3, 2025

தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, தென்காசி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News October 3, 2025

தென்காசி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..

News October 3, 2025

தென்காசி: கள்ளகாதல் விவகாரம்: ஒருவர் கொலை!

image

தென்காசி, ஆழ்வார்குறிச்சி அருகே கணேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் இறந்தது வாகன விபத்தாக கருதபட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கணேசனுக்கு ஒரு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதல் காரணமாக, ஆத்திரமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் தாக்கி கொன்று, விபத்து போல நாடகமாடியது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் 4 பேர் கைது.

error: Content is protected !!