News March 19, 2024
நாகை வேட்பாளர் வரலாறு

நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ,எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.தற்போது நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார்.
Similar News
News February 20, 2026
நாகை: அழுகிய நிலை கிடந்த ஆண் சடலம்

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சி மாதா கோவில் தெரு அருகில் வளப்பாறு அருகில் உள்ள வயலில் அழுகிய நிலையில் ஆண் சடலன் கிடந்துள்ளது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையெடுத்து தகவலின் பெயரில் நாகூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சடலத்தை மீட்டு இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? சடலம் எப்படி இங்கு வந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 20, 2026
நாகை மாவட்டத்தில் மதுவேட்டை : 626 பாட்டில்கள் பறிமுதல்!

நாகை எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், வாழ்மங்கலம் சோதனைச்சாவடியில் இருசக்கர வாகனத்தில் கடத்திய 626 பாண்டி சாராய பாட்டில்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து வாகனம், மொபைல் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News February 20, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


