News October 28, 2024
மதுரை வரும் முதல்வர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 30-ல் நடைபெற உள்ளது. இதற்காக வருகின்ற 29ஆம் தேதி மதுரை வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுகவின் அமைச்சர் மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கட்சி இதற்கு அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.
Similar News
News August 21, 2025
மதுரை அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

மதுரை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 21, 2025
மதுரையில் விஜய் போட்டியா..?

மதுரையில் தவெகாவின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வௌியிட போகிறேன் என கூறிய விஜய், மதுரை கிழக்கு என ஆரம்பித்து மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவேன் என்று சொல்லி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.