News October 28, 2024
ஹனிமூன் கொண்டாடும் வரலக்ஷ்மி: க்யூட் போட்டோ!

வரலக்ஷ்மி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவ் தம்பதியினர் தற்போது சீஷெல்ஸின் மாஹே தீவில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள். இதுபற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வரலக்ஷ்மி, “மனைவியின் க்யூட் போட்டோக்களுக்கு பின்னணியில் அவரின் கணவர் இருக்கிறார். மனைவி ஒரு க்யூட் போட்டோ போட, கணவன் 100 முறை போட்டோக்களை எடுக்க வேண்டும்” என ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். வரலக்ஷ்மி சொல்றது சரிதானே?
Similar News
News August 22, 2025
BREAKING: இனி ₹2 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ₹1 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ₹1 லட்சம்(முன்பு ₹20 ஆயிரம்) வழங்கப்படும். அதேபோல், இனி இயற்கை மரணத்திற்கு ₹30 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ₹10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News August 22, 2025
மீண்டும் வருகிறது ‘டிக் டாக்’?

ஒருகாலத்தில் இந்தியர்களை பைத்தியமாக்கியது, டிக் டாக் செயலி. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு இதை தடைசெய்தது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் வரலாம் என தகவல் உலா வருகிறது. டிக் டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக் டாக் செயலி அவைலபிளாக இல்லை. நீங்க டிக் டாக்கை வரவேற்பீர்களா?
News August 22, 2025
இரவில் பரோட்டா சாப்பிடுகிறவரா நீங்கள்?

இரவில் பரோட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பரோட்டா சாப்பிட்டால் ஜீரணமாக அதிகநேரம் பிடிக்கும். மேலும், இதற்காக அதிக தண்ணீரையும் வயிறு எடுத்துக்கொள்ளும். இதனால் உடலின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படும். தவிர, இதன் சத்தை பிரித்தெடுக்கவும் குடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுமாம். இதனால் உடல் சோர்வடைந்து தூக்கம் பாதிக்குமாம். SHARE IT!