News October 28, 2024
சஷ்டி: நெல்லை போக்குவரத்துக் கழகம் புது வசதி!
நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண்டல இயக்குநர் தசரதன் உத்தரவுப்படி, கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக அங்குள்ள பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் நாழிக்கிணறு பஸ் நிலையம் வரை ரூ.10 கட்டணத்தில் சர்க்கிள் பஸ் இயக்கம் இயக்கப்படுகிறது. இந்த பஸ்ஸில் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. நெல்லை பக்தர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Similar News
News November 20, 2024
நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டர் மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று(நவ.20) காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நாலு முக்கு பகுதியில் 166 மி.மீ., ஊத்து பகுதியில் 154 மி.மீ., காக்காச்சியில் 136 மி.மீ. என கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 10 மணி வரை நிலவரப்படி 100 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 20, 2024
வெள்ள தடுப்பு அறிவுரை வழங்கிய மாவட்ட நிர்வாகம்
நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் மழை நேரங்களில் டார்ச் லைட், வானொலி பெட்டி போன்றவை தயாராக வைத்திருக்க வேண்டும். குடை மற்றும் மூங்கில் கம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
News November 20, 2024
நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக இன்று(நவ.20) பள்ளிகளுக்கு நெல்லையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.