News October 28, 2024

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று  ஊழல் விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 10, 2025

கள்ளக்குறிச்சி: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

கள்ளக்குறிச்சி மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 10, 2025

கள்ளக்குறிச்சி: போலீசார் அதிரடி நடவடிக்கை

image

சங்கராபுரம் காவல் நிலையம் முன்பு நேற்று 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சுமன் என்ற நபரை கைது செய்யவில்லை எனக் கூறி சாலை மறியல் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி பார்த்திபன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் சுமன் என்ற நபரை இன்று அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருநங்கைகள் டி.எஸ்.பி க்கு நன்றி தெரிவித்தனர்.

News September 10, 2025

கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!