News October 28, 2024
நாமக்கல்லில் கள்ளச்சாராயம் கடத்திய நபர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குரங்காத்துப் பள்ளம் பகுதியில் தங்கராசு என்பவர் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்தியபோது போலீசாரால் கைது செய்யபட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சுமார் 128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, ஊறல் அழிக்கப்பட்டது.
Similar News
News February 9, 2026
நாமக்கல்லில் மகனை கொன்ற தந்தை: அதிரடி தீர்ப்பு!

நாமக்கல் மாவட்டம், மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த வழக்கில் முத்துசாமி (75) என்பவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் தீவிர முயற்சியால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News February 9, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் 10.02.2026 அன்று நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 17.02.2026 ஆம் தேதி முகாம் நடைபெறும். மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News February 9, 2026
நாமக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


