News October 28, 2024
ரீசார்ஜ் கட்டணம் குறைய வாய்ப்பு

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உரிமக் கட்டணத்தை 8% குறைக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை அரசு ஏற்கும்பட்சத்தில், ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 20, 2026
கவர்னர் பதவி நீக்கப்பட வேண்டும்: வேல்முருகன்

சட்டப்பேரவை மரபுகளை காலடியில் போட்டு மிதிக்கும் எந்த செயலையும், TN மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கவர்னருக்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 8 கோடி மக்களின் நம்பிக்கை பெற்ற சட்டப்பேரவை வெறும் ஒரு நிர்வாக மன்றம் அல்ல. அது TN மக்களின் ஜனநாயகக் குரல் என்றும், மக்கள் அதிகாரத்தை மீறி மாநில உரிமைகளை நசுக்கும் கவர்னர் பதவி முற்றிலும் நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 20, 2026
குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க ப்ளீஸ்..

பிறந்து ஒரு வயதான குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுப்பதில் மிக கவனம் தேவை. பெரியவர்கள் போல் அவர்களுக்கு ஜீரண சக்தி இருக்காது என்பதால் நட்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். பாக்கெட் பால், தேன், கடினமான காய்கறிகள், திராட்சை, கடல் சார்ந்த உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. மிட்டாய்களை கொடுக்கவே கூடாது. கடைகளில் வாங்கும் பிஸ்கட் போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
News January 20, 2026
‘ஜன நாயகன்’ படக்குழு மீது கோர்ட் அதிருப்தி

‘ஜன நாயகன்’ பட வழக்கு விசாரணையில் அதிரடி கருத்துகளை நீதிபதிகள் கூறியுள்ளனர். சென்சார் போர்டுக்கு போதுமான அவகாசத்தை படக்குழு வழங்காமல் கோர்ட்டை நாடியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு அவசர சூழலை படக்குழுவே உருவாக்கியுள்ளதாகவும் HC அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிபதிகளின் இந்த கருத்துக்களால் ‘ஜன நாயகன்’ படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.


