News October 28, 2024

விஜய்க்கு அரசியல் களத்தில் குவியும் ஆதரவு

image

மாநாடு வெற்றி போல் அரசியல் களத்திலும் விஜய் வெற்றியடைய ADMK கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், VCK MP ரவிக்குமார், ஆதவ் அர்ஜுனா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் விஜய்யை வரவேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Similar News

News July 10, 2025

கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி மரணம்

image

திருமணமாகி 3 மாதத்தில் உயிரிழந்த சென்னை வழக்கறிஞர் கவிதா குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி எனத் தெரியவந்துள்ளது. மாரடைப்பால் கவிதா உயிரிழந்ததாக கணவன் வீட்டார் கூறிய நிலையில், தனது மகள் மரணத்திற்கு வரதட்சணை கொடுமையே காரணம் என கவிதாவின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

News July 10, 2025

டீசரும் கிடையாது, டிரெய்லரும் கிடையாது.. கூலி புரமோஷன்?

image

கூலி படத்தில் இருந்து ‘Monica’ என்ற 2-வது பாடல் இன்று மாலை வெளியாகிறது. ஆக.14-ல் படமும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர், டிரெய்லர் ஏதும் வெளியிடாமல், புதுவித புரோமோஷன் செய்யும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இம்மாத இறுதியில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

News July 10, 2025

தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்கள்: TRB

image

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 & கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு செப்.28 முதல் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.12. மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். Share it

error: Content is protected !!