News October 28, 2024
கவரைப்பேட்டை ரயில் விபத்து 200 பேரிடம் விசாரணை

கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 200க்கும் மேற்பட்டோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் விபத்து நடந்த நேரத்தில் கவரைப்பேட்டை, பொன்னேரி பகுதிகளில் செல்போன் பேசிய சந்தேப்படும்படியான நபர்கள் சுமார் 200 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ் ஆப், டெலிகிராம், வி.பி. எண்ணை பயன்படுத்தி பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News September 12, 2025
போலீஸ் வேலை: திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர்: இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 3,665 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025. இப்போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 17.09.2025 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற எண்ணை அழைக்கவும்.
News September 12, 2025
திருவள்ளூர்: கேன் தண்ணீர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
திருவள்ளூர்: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

திருவள்ளூர் மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த இணையதளம் மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். (SHARE பண்ணுங்க)