News October 28, 2024
இதுவும் பழைய டெம்பிளேட்தான் தளபதி..!

“அவர்களே… இவர்களே…” என பழைய டெம்பிளேட்களை பயன்படுத்த விரும்பவில்லை என விஜய் கூறியுள்ளார். துண்டு, மாலை அணிவிப்பது குறித்தும் அவர் விமர்சித்திருந்தார். ஆனால், நிகழ்ச்சியில் அவருக்கு வெள்ளியாலான வீரவாள் வழங்கப்பட்டது. இதுவும் பழைய டெம்பிளேட்தான் எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், கட்சிக்காக உழைப்பவர்களின் பெயரை தலைவன் மேடையில் உச்சரிப்பது அவனுக்கான அங்கீகாரம் என்கின்றனர்.
Similar News
News January 27, 2026
கூட்டணிக்கு TTV என்னை அழைக்கவில்லை: OPS

OPS நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார் என<<18973340>> TTV தினகரன் <<>>தெரிவித்திருந்தார். ஆனால் TTV உட்பட யாரும் தன்னை கூட்டணிக்கு அழைக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதேசமயம் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தன்னுடைய ஒன்றை கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எல்லாம் ஆண்டவன் கையில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 27, 2026
NDA கூட்டணியில் இணையும் புதிய கட்சி?

அடுத்த வாரத்திற்குள் NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என நயினார் கூறியிருந்தார். இந்நிலையில், நயினாரை தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திரு.வி.க. நகர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
News January 27, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாற்றம்

2024-ம் ஆண்டு முடிவில் ₹96,748-ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை, 2025-ல் ₹1,38,000-ஆக உயர்ந்தது. இந்நிலையில், 2026-ல் 10 கிராம் தங்கத்தின் விலை 30% அதிகரித்து ₹1,80,000-ஆக உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், உலகளவில் அரசியல் பதற்றம் தொடர்ந்து நீடித்தால், இன்னும் 6 மாதங்களில் தங்கம் விலை கணித்ததை விட மேலும் உயரக்கூடும் எனவும் கூறுகின்றனர்.


