News October 28, 2024
கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்தவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுசோனை – பேவநத்தம் செல்லும் சாலையில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த கெலமங்கலம் நேதாஜி நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை ஆய்வாளர் பெரிய தம்பி, உதவி ஆய்வாளர் சிற்றரசு தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கர்நாடகா மது பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 25, 2025
கிருஷ்ணகிரியில் இலவச வீடியோகிராபி பயிற்சி!

கிருஷ்ணகிரி SC & ST இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோகிராபி & வீடியோ எடிட்டிங் சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலம் ஆறு மாதம். இதற்கு 18 முதல் 30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்படும். தங்கும் மற்றும் உணவு வசதி இலவசம். ஆர்வமுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புக்கு மாவட்ட தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
வேகமெடுக்கும் ஓசூர் விமான நிலைய திட்டம்

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. பெரிகை–பாகலூர் இடையே தேர்வு செய்யப்பட்ட இந்த தளம் TAAL ஓடுபாதையிலிருந்து 15.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி அனுமதி கோர உள்ளது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தல் முன்மொழிவை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
News August 24, 2025
கிருஷ்ணகிரி: உள்ளூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 TECHNICIAN காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th முடித்த 18-28 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <