News March 19, 2024
உதகை: மாரியம்மன் கோயில் திருவிழா

உதகை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நான்காவது நாளான நேற்று (மார்ச் 18) நீலகிரி மாவட்ட ஒக்கிலிகர் இனத்தார் சார்பில் புலி வாகனத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. இதில் கேரளாவின் செண்டை மேளம், கர்நாடகாவின் கிராமிய நடனம், தமிழ்நாட்டின் கோலாட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Similar News
News January 17, 2026
நீலகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நீலகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 17, 2026
நீலகிரி மக்களே உடனே செக் செய்யவும்!

நீலகிரி மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 17, 2026
டெல்லியில் ஜொலித்த கோத்தகிரி சிறுமி

டெல்லியில் நடைபெற்ற 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோத்தகிரியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பிரணிதா (12) இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த அந்த மாணவி சொந்த ஊர் திரும்பியபோது, ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.


