News March 19, 2024

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

image

தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சா நகரம் பகுதியில் நேற்று இரவு அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அதிமுக சார்பில் பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News December 31, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

உங்களது வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாகவும், அதை திரும்பி அனுப்புமாறு வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை, பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 31, 2025

மயிலாடுதுறை: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்திய, காரைக்கால் நெய்வேச்சேரி பெரியார் நகரை சேர்ந்த கார்த்திகேயன்(44) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 31, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.30) இரவு 10 முதல் இன்று(டிச.31) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!