News October 27, 2024
வலுவான நிலையில் சத்தீஸ்கர் அணி

தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சத்தீஸ்கர் அணி 500 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் பாண்டே 124, அனுஜ் திவாரி 84, சஞ்ஜீத் தேஷி 82, அஜய் மண்டல் 64 ரன்கள் குவித்தனர். தமிழக அணி சார்பில் அஜித் ராம் 4, சித்தார்த் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி இரண்டாம் நாள் முடிவில் 23/1 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 6, அஜித் ராம் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Similar News
News February 5, 2026
மானாமதுரை: பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

மானாமதுரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிப்.2 ம் தேதி, செம்பராயனேந்தல் ஆற்றுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் (20), மாணவியை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான புகாரில், மானாமதுரை போலீசார் சந்தோஷை தேடி வருகின்றனர்.
News February 5, 2026
ஒரே சட்டமன்ற தொகுதியில் அதிகமுறை வென்றவர்கள் யார்?

அரசியலில் கால்பதித்து ஒரு தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே பெரிய விசயம். ஆனால் ஒரே தொகுதியில் அதிகமுறை வெல்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு தொகுதி மக்களின் அபரிமிதமான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெறவேண்டும். அந்த வகையில் தற்போதைய TN அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியில் அதிக முறை வென்றவர்கள் யார் என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம். இவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார் என்பதை சொல்லுங்க!
News February 5, 2026
திமுக கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகலா?

திமுக கூட்டணியிலிருந்து யாரையும் விடுவதாக இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ளவர்கள் வேறு எங்கு சென்றாலும் அவர்களுக்கு எந்த சீட்டும் கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவது பற்றி தலைமையே முடிவெடுக்கும் என்றார். திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளியேறவுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


