News October 27, 2024

இந்தியா படுதோல்வி

image

நியூசி., அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசி., அணி 259 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இந்தியா 47.1 ஓவரில் ஆல் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசி., அணியில் கேப்டன் சோஃபி டெவின் 79, சுசி பேட்ஸ் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

Similar News

News August 23, 2025

RSS-யிடம் விஜய் பாடம் படிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

image

ஒழுக்கமாக மாநாடு நடத்துவது குறித்து இந்து, RSS அமைப்புகளிடமும் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். TVK-ன் 2-வது மாநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், வரும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக பெறும் என்றும், மநீம., போல் விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனவும் தெரிவித்தார்.

News August 23, 2025

1.5 கோடி தொண்டர்கள் பிரிந்துள்ளனர்: வைத்திலிங்கம்

image

EPS-க்கு 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார், ஆனால் 80 லட்சம் வாக்குகள் தான் அதிமுகவுக்கு கிடைத்ததாக OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உண்மையான தொண்டர்கள் 1.5 கோடி பேர் பிரிந்துக் கிடப்பதாகவும், அவர்களில் 99 சதவீதம் பேர் அதிமுக இணைய வேண்டும் என நினைப்பதாகவும் கூறினார். மேலும், அதிமுக ஒன்றிணைந்த பின் கூட்டணி அமைந்தால் அந்த அணி தேர்தலில் வெற்றிப் பெறும் என்றார்.

News August 23, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்

image

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது.
*இயல்பாக இருங்கள், அற்புதத்திற்கு திட்டமிடுங்கள்.
*யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே.
*உங்களை தவிர யாராலும் உங்களை கோபப்படுவதும் முடியாது. மகிழ்ச்சியாக்கவும் முடியாது. *நட்சத்திரங்களை பார்க்க கொஞ்சமாவது இருள் தேவை.

error: Content is protected !!