News October 27, 2024
இரவு ரோந்து காவலர்களின் விபரம் வெளியீடு

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் இன்று (அக். 27) மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொது மக்களின் உதவிக்காக இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண்கள் உள்ள அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த காவலர்களை இரவு நேர உதவிக்கு மாநகர பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News November 17, 2025
பாளை அருகே இரு தரப்பினர் மோதல்

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக நண்பர்களுடன் ஆட்டோவில் அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்துக் கொண்டே கூச்சலிட்டபடி சென்றனர். இதனை மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் தட்டி கேட்டனர்.அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 4 மாணவர்கள் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர், சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.16) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் காவல் சரகம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. எனவே, இரவில் காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 16, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்தன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


