News October 27, 2024

திமுகவுக்கு உருவான புதிய தலைவலி

image

சமீபத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என விசிக, காங்., பேசியதால் திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், 2026இல் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என விஜய் கூறியுள்ளார். இதனால், பழைய பாணியில் கூட்டணி கட்சிகளிடம் திமுக சீட் பேரம் பேச முடியாது. ஆட்சியில் பங்கு வழங்க வேண்டிய சூழலும் உருவாகலாம். விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுகவுக்கு புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

Similar News

News February 16, 2026

ரயில் டிக்கெட்களுக்கு கேஷ்பேக்

image

ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. Rail One செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்கள் எடுத்தால், 3% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து ரயில் பயணிகளுக்கும் கிடைக்கும். UTS செயலி மூடப்படுவதால் இனி Rail One-ல் உள்ளூர் புறநகர் ரயில்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

News February 16, 2026

குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுக்கலாமா?

image

பிறந்து 1-2 மாதங்களே ஆன குழந்தைகளுக்கு, மருத்துவ ஆலோசனையின்றி கிரைப் வாட்டர் (Gripe water) கொடுப்பதைத் தவிருங்கள். இது அவர்களுக்கு பசியின்மை, ஒவ்வாமை போன்றவற்றை பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவர்களுக்கு ஏற்படும் செரிமான கோளாறுகளுக்கு இது ஒரு தற்காலிக தீர்வாக கருதப்பட்டாலும், அடிக்கடி கொடுப்பது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளை காக்க அனைவருக்கும் SHARE THIS.

News February 16, 2026

BREAKING: நாடு முழுவதும் முடங்கியது.. கடும் அவதி

image

கடந்த அரைமணி நேரமாக இந்தியா முழுவதும் X தளம் முடங்கியுள்ளது. சர்வர் கோளாறு, நெட்வொர்க் பிரச்னை காரணமாக X தளம் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உண்மையான காரணம் குறித்து X நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை. X தளத்தின் சேவை முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் X சேவைகள் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!