News October 27, 2024
”Coffee with Collector” ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து “Coffee with Collector” என்ற தலைப்பில் தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 4, 2026
தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று முன்தினம் (பிப்.2) கம்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தௌபிக்கான் (29) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தௌபிக்கான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News February 3, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 03.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 3, 2026
தேனி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!


