News October 27, 2024
அரசியலுக்கு வந்தது ஏன்? பதில் சொன்ன விஜய்

நடித்தோமா, பணம் சம்பாதித்தோமானு இருந்திடலாம் என்று தான் முதலில் தோன்றியது என்று தொடங்கிய விஜய், “ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்த்து என்ன செய்யப் போகிறோம் என ஒரு கட்டத்தில் தோன்றியது. நம்மள இந்த உயரத்தில் வைத்திருக்கும், வாழவைக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. இதை தீவிரமாக யோசித்ததன் விளைவாக மனதில் தோன்றிய எண்ணம் தான் ‘அரசியல்’, மக்களுக்கான அரசியல்!” என்றார்.
Similar News
News January 31, 2026
சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 31, 2026
ஓபிஎஸ் தனித்து போட்டியிட விரும்பும் திமுக

முன்னாள் CM OPS, தனித்து நிற்பதே தங்களுக்கு சாதகம் என ரகசிய ஆய்வுக்கு பின் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், திமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினால், அவரது ஆதரவு ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்காது என்றும், அதே நேரத்தில் OPS தனித்து நின்றால் அதிமுக ஓட்டுகள் பிரிவதுடன் திமுகவின் வெற்றிக்கும் வழிவகுக்கும் எனவும் பேசப்பட்டுள்ளதாம்.
News January 31, 2026
தீவிர சிகிச்சை பிரிவில் H.ராஜா.. என்னாச்சு?

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா அப்பல்லோ ஹாஸ்பிடலில் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மூளை பக்கவாதம் என கருதி முதலில் அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கும், பின்னர் அங்கிருந்து அப்பல்லோவுக்கும் அழைத்து செல்லப்பட்டார். தற்போது ICU-வில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதாக தகவல் வந்துள்ளது.


