News October 27, 2024

பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்

image

தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசி பெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார்.

Similar News

News January 27, 2026

பெண் வடிவத்தில் அனுமன் இருக்கும் கோயில்?

image

சத்தீஸ்கரின் ரத்தன்பூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது ரத்தன்பூர் மன்னர் பிருத்வி தேவ்ஜுவால் கட்டப்பட்டது. மன்னரின் கனவில் தோன்றிய அனுமன், அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் இருக்கும் சிலையை எடுத்து வந்து கோயிலை கட்டி பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினாராம். அங்கு பெண் வடிவிலான சிலை கிடைத்த போதிலும், மன்னர் கோயிலை கட்டியுள்ளார். அப்படித்தான் ‘மாதா அனுமன்’ தோன்றியதாகக் கூறப்படுகிறது.

News January 27, 2026

FLASH: இன்று விடுமுறை!

image

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் சங்கம்(AIBEA) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் AIBEA வேண்டுகோள் விடுத்துள்ளது. LIC-ல் 100% அந்நிய முதலீடு, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.

News January 27, 2026

தென் கொரியாவுக்கு டிரம்ப் வைத்த செக்!

image

தென் கொரிய இறக்குமதிகளுக்கான வரிகளை 25% ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்தாண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை சியோல் நிறைவேற்றத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒப்பந்தத்தின்படி வரிகளை குறைக்க நாங்கள் விரைவாக செயல்பட்டோம் என்றும், ஆனால் தென் கொரிய பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டி வருகின்றனர் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!