News October 27, 2024
7 மணிக்குள் மாநாட்டை முடிக்க அஸ்ரா கார்க் அறிவுறுத்தல்

தவெக மாநாட்டை இரவு 7 மணிக்குள் முடிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும், வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு முன்னரே தொடங்கியுள்ளதால் 7 மணிக்குள்ளாகவே மாநாடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 3, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?
News February 3, 2026
டாஸ்மாக் இருப்பது திமுகவின் ஆசை அல்ல: அமைச்சர்

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதில் CM ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் நீண்ட காலமாக இருந்துவிட்டது, அதனை திடீரென ஒரே நாளில் தூக்கியெறிந்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். டாஸ்மாக் இருக்க வேண்டும் என்பது திமுகவின் ஆசை அல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News February 3, 2026
நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. Meta-வை கண்டித்த SC!

WhatsApp-ன் தாய் நிறுவனமான Meta-வை SC கடுமையாக விமர்சித்துள்ளது. WhatsApp-ன் Privacy Policy விசாரணையின் போது, இந்திய சட்டங்களை பின்பற்றவில்லை எனில், நாட்டில் இருந்து வெளியேறும் படியும் கடிந்து கொண்ட CJI சூர்யகாந்த் சர்மா, குடிமக்களின் Privacy-ல் விளையாட முடியாது எனவும் எச்சரித்துள்ளார். நாட்டு மக்களின் தரவுகளில் ஒரு எழுத்தை கூட பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.


