News October 27, 2024

தவெக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்..! (1/3)

image

தவெகவின் செயல்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. * சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு. *அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம். *இரு மொழிக் கொள்கை – தமிழ் மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம். *கட்சியில் 3ல் ஒரு பங்கு பதவிகள் மகளிருக்கு வழங்கப்படும். *ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல்: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர அழுத்தம். *பதநீரை மாநில பானமாக அறிவிக்க நடவடிக்கை.

Similar News

News January 23, 2026

காங்கிரஸில் மீண்டும் பிரச்னை வெடித்தது

image

காங்., MP சசி தரூர் மீது ராகுல்காந்தி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகுல் கேரளாவுக்கு சென்றிருந்தார். அப்போது நடந்த கூட்டத்திற்கு சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் தனக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என சசி தரூர் கருதுவதாக சொல்கின்றனர். ஆனால், சமீபகாலமாக சசி தரூர் <<9751434>>மோடியை<<>> பாராட்டி கருத்துகள் சொல்வதால் காங்., தலைமை கடுப்பில் இருக்கலாம் என்கின்றனர்.

News January 23, 2026

TN-க்கு NDA அரசு செய்த துரோகங்கள்: ஸ்டாலின்

image

தேர்தல் சீசன் வந்தால் மட்டும் TN பக்கம் அடிக்கடி வருகிறார் <<18931688>>மோடி<<>> என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். NDA கூட்டணியின் துரோகங்களை TN பட்டியலிட்டு வருவதாக கூறிய அவர், TN-க்கான கல்வி நிதி, நீட் விலக்கு, எய்ம்ஸ், பேரிடர் நிதி, கோவை & மதுரை மெட்ரோ எப்போது வரும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்கு TN எப்போதுமே தோல்வியைத்தான் தரும் என பதிவிட்டுள்ளார்.

News January 23, 2026

‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

image

மத்திய அரசின் ‘VB-G RAM G’ திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தில், *2005-ல் கொண்டுவரப்பட்ட MGNREGA திட்டம் மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடர வேண்டும். *மாநில அரசு 40% நிதி பங்கீட்டை நீக்க வேண்டும். *இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ₹2,113 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

error: Content is protected !!