News October 27, 2024

TVK தலைவர் விஜய்க்கு சசிகுமார் வாழ்த்து

image

தவெக முதல் மாநாட்டை ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கியுள்ள சூழலில், பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான சசிகுமாரும் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அதில், உங்கள் வரவு, எளிய மக்களுக்கான நம்பிக்கையாக அமையட்டும். நல்வாழ்த்துகள் விஜய் சார் எனக் குறிப்பிட்டுள்ளார். TVK தலைவர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News January 29, 2026

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சசி தரூர்

image

காங்., MP சசி தரூர், சமீபகாலமாக PM மோடியின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வந்தார். இதனால், அவர் சொந்த கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்படுவதாகவும், பாஜகவில் இணையவுள்ளதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், கார்கே, ராகுலை சந்தித்த போட்டோவை வெளியிட்ட சசி தரூர், ‘ஒருமித்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்’ என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News January 29, 2026

தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை: விஜய்

image

TN-ஐ பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று CM ஸ்டாலின் வாய் கூசாமல் பொய் சொல்வதாக விஜய் சாடியுள்ளார். தனது X-ல், பிஹார் மாநில தொழிலாளி கொலை & கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆகிய சம்பவங்களை சுட்டிக்காட்டி, TN-ல் மக்களுக்கும், பிழைப்பு தேடி வந்தோருக்கும் பாதுகாப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் DMK அரசு மெத்தனம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News January 29, 2026

சற்றுமுன்: விலை மளமளவென சரிந்தது.. 1 கிலோ ₹7 மட்டுமே!

image

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வழக்கமாக, ₹40 வரை விற்கப்படும் 1 கிலோ தக்காளி, இன்று வெறும் ₹7-க்கு மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதேபோல், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் தக்காளி விலை வழக்கத்தைவிட குறைந்திருக்கிறது. உங்கள் ஊரில் 1 கிலோ எவ்வளவு?

error: Content is protected !!