News March 19, 2024

அந்தியூர் அருகே வேலை வாய்ப்பு முகாம்

image

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண மாணவர்களுக்கு வளாக தேர்வு நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். அவற்றில் 329 மாணவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி நியமன ஆணையை வழங்கினார்.

Similar News

News August 7, 2025

சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

image

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விரோத செயல்கள் குறித்து உடனடியாக கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News August 7, 2025

ஈரோடு: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

image

ஈரோடு மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் வேலை கிடைக்க அரிய வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 7, 2025

ஈரோட்டில் இன்றைய வெப்பம் பதிவு

image

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் கனமழை பெய்து வந்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பின் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று ஈரோட்டில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!