News March 19, 2024

வேனில் 405 சேலைகள் பறிமுதல்

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(மார்ச்.18) திருச்செந்தூர் ஆலந்தலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 405 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News October 24, 2025

திருச்செந்தூரில் 14 பேரை கடித்த தெருநாய்!

image

திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில், நேற்று தெருநாய் ஒன்று பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் வியாபாரி என 14 பேரைத் துரத்திக் கடித்து காயப்படுத்தியது. படுகாயமடைந்த அனைவரும் பிச்சிவிளை மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

News October 24, 2025

சேவை குறைபாட்டால் பொதுத்துறை வங்கிக்கு அபராதம்

image

விளாத்திகுளத்தை சேர்ந்தவர் நீதிமன்ற ஊழியர் கார்த்திக் ராஜா. இவர் தூத்துக்குடியில் ஒரு பொதுத்துறை வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்ற போது பணம் வந்ததாக ரசீது மட்டும் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் வங்கிக்கு ரூ.30000 அபராதம் விதிக்கப்பட்டது.

News October 24, 2025

உயர்கல்வி சேர்க்கையில் தூத்துக்குடி மாவட்டம் சாதனை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் என் கல்லூரி கனவு உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 18130 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் உயர் கல்வி சேர்க்கையில் 96.15% சாதனை படைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!