News October 27, 2024

பஜார் பகுதியில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

image

தீபாவளி பண்டிகை வரும் 31 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் இன்று (அக்.27) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடம் கவரிங் நகைகள், குடைகள், பாய்கள், சிறிய ஜவுளி பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிலவுவதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News February 3, 2026

விருதுநகர்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

விருதுநகர் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 3, 2026

ஸ்ரீவி: புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ – பரபரப்பு

image

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சாம்பல்நிற அணிகள் சரணாலயம், மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று இரவில் இங்குள்ள தூங்கன் கடவு பீட் வெள்ளைப்பாறை சரகத்திற்குட்பட்ட பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதையடுத்து காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வனச்சரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!