News March 19, 2024
கள்ளக்குறிச்சி: பாதுகாப்பு அறை ஆய்வு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல முன்னேற்பாடாக EVM வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு அதனை வைப்பதற்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி கீதா, தனி வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
Similar News
News October 24, 2025
கள்ளக்குறிச்சி: மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இவ்வளவா?

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி பரவலான மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதாரம் உண்டாகியுள்ளது. இதில் மொத்தம் 51 கூரை வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. 5 பசுமாடுகள் மற்றும் 1 ஆடு என 6 கால்நடைகள் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தைச் சார்ந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 24, 2025
நடந்துச்சென்ற முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து

சூளாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற எண்பது வயது முதியவர் கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று அக்.23 பணிக்காக உழவர் சந்தை அருகே உள்ள வணிக வளாகம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதியதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 24, 2025
கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

கடந்த 2024 -25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி குறைவாக அளித்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் அக்.23ஆம் தேதி அன்று நடைபெற்றது. மேலும் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான பல்வேறு விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டது.


