News October 27, 2024
Motor News: 92,000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா

இன்ஜினுக்கு பெட்ரோலை அனுப்பும் பியூயல் பம்ப் கோளாறின் காரணமாக 92,672 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேஸ், ப்ரியோ, BR-V, சிட்டி, ஜாஸ், WR-V கார்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. இலவச மாற்றீடுகளை வழங்கும் நடைமுறைகள் நவ. 5, 2024 முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
பாரதியார் பொன்மொழிகள்!

*நோய் இல்லையென்று மனதில் உறுதி செய்; மனம்போல் உடல் அமையும் – மகாகவி பாரதி. *இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்? அன்னை தெரசா. *பிறக்கும்போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும்போது உன்னோடுதான் இருக்கும். அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு – அடால்ஃப் ஹிட்லர்.
News February 14, 2026
பாஜக வேட்பாளர்கள் யார் யார்? பாஜக இன்று ஆலோசனை

இன்று காலை பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாஜக தேர்தல் மேலாண்மைக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து, வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்பின், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் லிஸ்டை அமித்ஷாவிடம் கொடுத்து இறுதி செய்யும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.
News February 14, 2026
சிறப்பு மகளிர் உரிமை தொகை ₹5000.. வெடித்தது சர்ச்சை

ஊதிய உயர்வு கோரி, தூய்மைப்பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை போராட்டம் நடத்தினால் நிதியில்லை திமுக அரசு கூறுகிறது. ஆனால், ஒரே நாளில் சிறப்பு மகளிர் உரிமைத் தொகை ₹5000 வரவு வைக்க மட்டும் எப்படி நிதி வந்தது என கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஆதி திராவிடர் * பழங்குடியினருக்கு ஒதுக்கிய நிதியை, மகளிர் உரிமைத் திட்டத்திற்கு திமுக அரசு செலவழித்ததாக RTI தகவலை சுட்டிகாட்டி பலரும் விமர்சிக்கின்றனர்.


